இன்றைய வானிலை அறிக்கை!

Date:

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவுகின்றது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

வளிமண்டலவியல் திணைக்களம்)

Popular

More like this
Related

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார...

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!

தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து...

களனி கங்கை தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

களனி கங்கைப் படுகைக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தலை எதிர்வரும்...

மோசமான வானிலை: பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

நிலவிவரும் மோசமான வானிலை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால்,...