எத்தியோப்பியாவின் அம்ஹரா மாகாணத்தில் உள்ள இரு நகரங்களை கிளர்ச்சிப்படை கைப்பற்றியதை தொடர்ந்து பிரதமர் அபி அஹ்மத் அங்கு ஆறு மாத காலத்திற்கு அவசரநிலையை பிரகடனப்படுத்தி உள்ளார்.
டைக்ரே பகுதியை தனி நாடாக அறிவிக்குமாறு கோரி இனக் குழுக்களுக்கும் , அரச படைக்கு எதிராக ஓராண்டுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.கடந்த திங்கட்கிழமை தலைநகர் அட்டிஸ் அபாபா அருகில் உள்ள கொம்பல்சோ ,டெஸ்ஸி நகரங்களை கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது இதனையடுத்து கிளர்ச்சியாளர்கள் தலைநகரை நெருங்கியதை அடுத்து பிரதமர் அபி அஹ்மத் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.