கராத்தே போட்டியில் தேசிய ரீதியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவனை கெளரவிக்கும் நிகழ்வு!

Date:

இலங்கை தேசிய கராத்தே சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட National Karate Virtual Kata Championship-2021 போட்டியில் பங்குபற்றி தேசிய ரீதியில் வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவன் RM.மினாத் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(28.11.2021) நடைபெற்றது.

மேற்படி ஓட்டமாவடியில் அமைந்துள்ள Suhari shotokan karate association & Skms ல் நடைபெற்ற இந் நிகழ்வில் பாடசாலையின் தலைவரும் மற்றும் இலங்கைக்கான சுஹாரி சோட்டக்கன் கராத்தே சங்கத்தின் பிரதிநிதியுமான சிஹான் MS.WAHABDEEN தலைமையில் பிரதி அதிபரும் மற்றும் உடற்கல்வி ஆசிரியருமான ACM.பிர்னாஸ் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் MM.நபீல் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

செம்மண்ணோடையில் அமைந்துள்ள Suhari shotokan karate association & SKM பாடசாலை இல் நடைபெற்ற இந்நிகழ்வில் இம்முறை தேசிய கராத்தே சம்மேளன Virtual kata போட்டியில் எமது மாணவன் மினாத் தேசிய ரீதியில் 18/21 வயதுப் பிரிவில் மூன்றாம் இடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்தை வெற்றியீட்டியிருந்தார் இந்நிகழ்வில் மாணவருக்கு பதக்கம் அனுவிக்கப்பட்டு வெற்றிச் சான்றிதளும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பங்கு பற்றியோருக்கான சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...