கவனிப்பாரற்ற நிலையில் கல்முனை பீச் பார்க் கட்டிடம்!

Date:

எம். என். எம். அப்ராஸ்

அம்பாரை மாவட்டம் கல்முனை மாநகர பிரிவில் உள்ள மாநகர சபை பராமரிப்பில் காணப்படும் கல்முனை பீச்பார்க்கில் புதிதாக நிர்மாணி்கப்பட்ட கட்டிடம் முடிய நிலையில் இதுவரை எதுவித பயன்பாட்டின்றி காணப்படுதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கல்முனை கடற்கரை வீதியில் உள்ள குறித்த பீச் பார்க்கில் அமைந்துள்ள புதிதாய் காணப்படும் கட்டிடம் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளதுடன் இதுவரை மக்கள் பாவனைக்கு இல்லை என தெரியவருகிறது.

குறிப்பாக அந்த கட்டிடத்தின் கதவுகள் மற்றும் கண்ணாடிகள் , கூரை பகுதி உடைந்த நிலையில் உள்ளதுடன்கட்டிட உள் பகுதிகள் மிகவும் பாழடைந்த நிலையில் குப்பை கூளங்கள் உள்ளதுடன் துர் நாற்றம் வீசும் நிலையில் உள்ளதை அவதானிக்க முடிகிறது.

அத்துடன் குறித்த வீச் பார்க்கில் அடிக்கடி கட்டாக்காலி கள் நடமாடுவதுடன் , மழை காலங்களில் வீச் பார்க் வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதை காண முடிவதுடன் மேலும் குறித்த கட்டிட பகுதியில் கட்டாக்காலிகளின் தங்குமிடமாக உள்ளதை காணமுடிகின்றது .

குறித்த வீச் பார்க்கில் அமைந்துள்ள கட்டிடத்தினை விரைவில் பயன்பாட்டிற்க்கு விட வேண்டும் என பொது மக்கள் கோருகின்றனர்

இது தொடர்பில் கல்முனை மாநகர முதல்வர் ,ஆணையாளர்,கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் , உரியவர்கள் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாய் உள்ளது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...