கொவிட் இறப்புக்களை 89% இனால் தடுக்கும் புதிய மாத்திரையை பரிசோதித்துள்ளதாக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.
பைசர் நிறுவனத்தின் என்டிவைரஸ் மாத்திரையின் பரிசோதனை முடிவுகளை பிரித்தானிய ஒப்புதல் அளித்துள்ள மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் நிறுவனத்தின் மோல்னுபிராவிர் மாத்திரையை விட அதிக அளவு செயல் திறன் மிக்கதாக இது அமைந்துள்ளது.எனினும் முழுமையான பரிசோதனை முடிவுகளின் தரவுகளை இரு நிறுவனங்களும் வெளியிடவில்லை.
அதேவேளையில் பைசர் நிறுவனம் தங்களின் கொவிட் எதிர்ப்பு மாத்திரையின் இடைக்கால பரிசோதனை தரவுகளை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக அமைப்பிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது.