கொவிட் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் முகமாக முழு உலகிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது எனினும் உலகில் முதல் முறையாக கொவிட் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மாத்திரை பிரிட்டனில் தயாரிக்கப்பட்டுள்ளது.இதற்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தடுப்பூசி குறித்த அச்சத்தால் மக்களில் பாதி பேர் அதனை செலுத்தாமல் உள்ளனர்.அதற்கு தீர்வு காணும் விதமாக மெர்க் மற்றும் ரிட்ஜ்பாக் பையோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து கொவிட் சிகிச்சைக்காக மோல்னுபிரவிர் மருந்தால் தயாரிக்கப்பட்ட மாத்திரையை உருவாக்கியுள்ளனர்.
பிரிட்டன் அரசு இதற்கு அனுமதி வழங்கியதோடு மோல்னுபிரவீர் என்ற பெயரில் வெளியிடப்பட உள்ளது.பரிசோதனையில் கொவிட் உறுதிப்பட்டாலோ அல்லது கொவிட் அறிகுறிகள் தென்பட்டு 5 நாட்களுக்குள்ளாகவோ இதனை உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.