ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய சர்ச்சையால் அவுஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து டிம் பெய்ன் விலகியுள்ளார்.அவர் இதனை ஹோபார்ட் நகரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.அத்தோடு இந்த முடிவை கிரிக்கெட்டின் நலன் கருதி எடுத்ததாகவும் ,தனது செயல் அவுஸ்திரேலியா கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணியின் பெண் நிர்வாகி ஒருவருக்கு ஆபாசா குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தமை குறிப்பிடத்தக்கது.