சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களின் கற்பித்தல் செயற்பாடுகள் நாளை மறுதினம் ஆரம்பம்!

Date:

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் சாதாரண தர மற்றும் உயர்தரங்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை நாளை மறுதினம் (08) முதல் கட்டாயம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தரம் 10,11 ,12 மற்றும் 13 மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை‌ ஆரம்பிப்பதற்கு கொவிட் 19 தடுப்பு செயலணி பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது ‌.

கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது.தரம் 6 முதல் 9 வரையான கற்பித்தல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை 50% மாணவர்களுடன் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இத் தீர்மானம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணரத்னவினால் வெளியிடப்பட்ட வழிகாட்டிக்கு அமைவாகவே எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு...

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...