2020 கல்வி பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையில் 9 பாடங்களிலும் விசேட சித்தி பெற்று நாட்டில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற ஐந்து மாணவ மாணவிகள் மற்றும் வரலாற்றில் முதல் தடவையாக 9 பாடங்களிலும் விசேட சித்தி பெற்ற விழிப்புலனற்ற மாணவர்கள் இருவரும் இன்று (22) பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.
பிரதமரை சந்திப்பதற்கு வருகை தந்த சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுடன் பிரதமர் நட்பு ரீதியான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், அவர்களது எதிர்கால எதிர்பார்ப்புகள் குறித்து வினவியதுடன், அவர்களது எதிர்கால கல்வி நடவடிக்கைகள் வெற்றி பெற வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்
வரலாற்றில் முதல் முறையாக விழிப்புலனற்ற மற்றும் விசேட தேவையுடைய மூன்று மாணவர்கள் 9 பாடங்களிலும் விசேட சித்தி பெற்றுள்ள நிலையில், அவர்கள் இருவரையும் பிரதமருக்கு கல்வி அமைச்சர் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.