நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரத சேவைகள் நாளை (08) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
180- 200 புகையிரத சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாளை முதல் (08) காங்கேசன்துறை மற்றும் கொழும்பு முதல் கண்டி வரையில் புகையிரத சேவை ஆரம்பிக்கப்படும்.வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளைக்கான புகையிரத சேவைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
இரவு நேர அஞ்சல் புகையிரத சேவைகளையும் ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.