நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டின் மீது தாக்குதல்!

Date:

குறிஞ்சாக்கேணி பாலம் விவகாரத்திற்கு தீர்வை பெற்றுக் கொடுக்காததால்  முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டின் மீது பொதுமக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று (23) காலை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 7பேர் மரணமடைந்ததுடன் குறித்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந் நிலையில் படகு விபத்தின் பலி எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து கிண்ணியாவில் பதற்ற நிலைமை உருவானது.இதனை தொடர்ந்து அப் பகுதியில் அமைந்துள்ள முஸ்லீம் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தௌபீகின் வீட்டின் மீது பொதுமக்கள் ஆவேசத்துடன் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.குறித்த சம்பவத்தை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கடற்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...