பெண்கள் நடிக்கும் தொலைக்காட்சி தொடர்களுக்கு ஆப்கான் அரசு தடை விதித்தது!

Date:

ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தொலைக்காட்சி சேனல்களில் பெண்கள் நடிக்கும் தொடர்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. தாலிபான் அரசு, தொலைக்காட்சிகளில் தோன்றும் பெண் செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோர் ஹிஜாப்கள் அணியுமாறு  உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், மதத்தை அவமதிக்கும் வகையிலான நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக்கூடாது என்றும், ஆப்கானிஸ்தானின் சட்டங்களுக்கு எதிரான படங்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், இக்கட்டுப்பாடுகள் அனைத்தும் நடைமுறையில் சாத்தியப்படாது என்றும் அப்படியே அமுல்படுத்தினாலும், தொலைக்காட்சிகள் மூடவேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்றும் அந் நாட்டின் பத்திரிகையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் உறுப்பினர் ஹுஜ்ஜத்துல்லா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/news/world-asia-59368488

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...