களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய தெஹியோவிட்ட, ருவன் வெல்ல, தொம்பே, கடுவலை, பியகம, கொலன்னாவ , கொழும்பு மற்றும் வத்தளை பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.