கோதுமை மாவின் விலை அதிகரிப்பினால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.இது தொடர்பாக இன்று (28) காலை அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவிக்கவுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதாக நேற்று (27) நிறுவனங்கள் தெரிவித்திருந்த நிலையில் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.