மக்கள் மத்தியில் ஒற்றுமை, சமாதானம், சகவாழ்வு, சகோதரத்துவத்தை பலமடையச் செய்வதற்காக கண்ணில் ஆபரேஷன் அல்ல சவப்பெட்டிக்குள் இருந்தாலும் முடியுமானால் வந்து உரையாற்றுவேன் – தேர்தல் ஆணைக்குழுவின் முன்னால் தலைவர் மஹிந்த தேசப்பிரிய!

Date:

அமீர் ஹூசைன்

மக்கள் மத்தியில் ஒற்றுமை, சமாதானம், சகவாழ்வு, சகோதரத்துவத்தை பலமடையச் செய்வதற்காக கண்ணில் ஆபரேஷன் அல்ல சவப்பெட்டிக்குள் இருந்தாலும் முடியுமானால் வந்து உரையாற்றுவேன் என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னால் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார். அஷ்ஷேக் அக்ரம் ரஸ்ஸாக் (நளீமியால்) எழுதப்பட்ட ‘ ‘இஸ்லாமிய துஷ்டிகோணயென் விவித ஜனகொடஸ் அதர மித்ரத்வய’ என்ற சிங்கள மொழி மூலமான நூல் வெளியீட்டில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இஸ்லாம் எனும் கயிற்றை இறுக்கமாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள் வழி தவற மாட்டீர்கள் என்று முஸ்லிம்களுக்கு அறைகூவல் விடுக்கும் இஸ்லாம் அன்பு, காருண்யம், சகவாழ்வு, சகோதரத்துவம் போன்ற உண்ணதமான பண்புகளை முழு மனித சமுதாயத்திற்கும் வெளிப்படுத்தும் சிறந்த மார்க்கம் ஆகும் என்றும் அவர் கூறினார். அவரது கண்ணில் சத்திர சிகிச்சை செய்து ஓய்வாக இருந்த நிலையில் இந்நிகழ்ச்சியில் பங்குபற்றினார்.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...