பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் கடந்து வந்த பாதை

Date:

மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் ஐந்தாவது ஜனாதிபதியாவார். ஜனவரி 26, 2010இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது தடவையாக அவர் தெரிவுசெய்யப்பட்டமை, தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்ரிரிஈ) பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்து, நாட்டின் பாதையை சமாதானம், பலமான ஜனநாயகம், துரித பொருளாதார அபிவிருத்தி நோக்கிச் செலுத்திய தேசியத் தலைவராக அவரை இலங்கையின் வாக்காளர்கள் அங்கீகரித்ததைக் காட்டியது. மே 2009இல் எல்ரிரிஈ இயக்கம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற முதலாவது நாமுழுவதற்குமான தேர்தலில் மற்றும் இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னராக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வாக்காளர்கள் சுதந்திரமாகப் பங்குபற்றிய தேர்தலிலியே மஹிந்த ராஜபக்‌ஷவின் மீள்தேர்வு இடம்பெற்றது.

ஆரம்ப காலங்கள்

ஆறு சகோதரர்களையும் மூன்று சகோதரரிகளையும் கொண்ட குடும்பத்தில் இரண்டாவதாக மஹிந்த ராஜபக்‌ஷ, இலங்கையின் ஆழ் தெற்கில் வீரகெட்டியவில் நவம்பர் 18, 1945இல் பிறந்தார். அவரது ஆரம்பக் காலத்திலிருந்து அவர் சிங்கள – பௌத்த பாரம்பரியங்களுக்கு ஏற்றவாறு வளர்க்கப்பட்டார். அரசியலில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்‌ஷவின் தந்தை டி.ஏ. ராஜபக்‌ஷ, மாமா, மைத்துனர்கள் போன்றோரும் கல்விகற்ற தெற்கு நகரான காலியின் றிச்மொன்ட் கல்லூரியில், அவரும் ஆரம்பக் கல்வி கற்றமையூடாக, பாடசாலை செல்லலிலும் அவரது குடும்ப பாரம்பரியம் காணப்பட்டது. அவரது கல்வி, அதன் பின்னர் கொழும்பிலுள்ள நாலந்தாக் கல்லூரி, தேர்ஸ்டன் கல்லூரி ஆகியவற்றுக்கு பின்னர் மாற்றப்பட்டது.

மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் முதன்முதலில் தனது 24 வயதில் ஶ்ரீசுக-இன் அங்கத்தவராக பெலியத்த தேர்தல் தொகுதியிலிருந்து 1970ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். அவர் அப்போதைய நிலையில் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய இளைய பாராளுமன்ற உறுப்பினர் என்பதோடு, அவரது தந்தை தெரிவான அதே தேர்தல் தொகுதியிலிருந்தே அவரும் தெரிவாகியிருந்தார். அவர் அமைச்சராக 1994ஆம் ஆண்டு நியமிக்கப்படும்வரை பிரதானமாக தெற்கு நகரான தங்காலையில் 1977ஆம் ஆண்டிலிருந்து 1994வரை சட்டத்துறையில் ஈடுபட்டார். அது அங்குள்ள மக்களுடனும் அவர்களது தேவைகளுடனும், அத்துடன் தென் பகுதியின் அபிவிருத்தித் தேவைகள் தொடர்பாகவும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தியது. தனது பாராளுமன்ற ஆசனத்தை 1977ஆம் ஆண்டு இழந்த பின்னர், அவர் அதைத் தொடர்ந்த 1989ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அதைப் பெற்றார். அவர் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மீளத் தெரிவுசெய்யப்பட்டதோடு, 2005ஆம் ஆண்டு நவம்பரில் நிறைவேற்று ஜனாதிபதியாகத் தெரிவாகும் வரை அப்பதவியை வகித்தார்.

அபிவிருத்தி

மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், மகம றுகுணுபுர மஹிந்த ராஜபக்‌ஷ துறைமுகம், மத்தளை ராஜபக்‌ஷ சர்வதேச விமானநிலையம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தின் முதற்கட்டம், கெரவலப்பிட்டிய இணைந்த வெப்ப மின்சக்தி நிலையம், மேல் கொத்மலை நீர்மின்சக்தி செயற்றிட்டம் உட்பட பல பெரிய உட்கட்டமைப்பு அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டன. அவரது ஜனாதிபதிக் காலத்தின் போது, மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் நான்கு துறைமுகங்களை தரமுயர்த்தவும், நாட்டின் பெரிய நகரங்களை இணைக்கும் வடக்கு அதிவேக நெடுஞ்சாலை உட்பட்ட மூன்று புதிய அதிவேக நெடுஞ்சாலைகளை உருவாக்குதல் ஆகியவற்றையும் முன்னெடுத்தார். மின்சக்தி விநியோகத்தை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவப்படுத்தலானது, விடுதலைப் புலிகளால் தொடர்புகள் அழிக்கப்பட்ட யாழ்ப்பாணம் உள்ளடங்கலாக, நாட்டின் 90 சதவீதமான பகுதிகள் தேசிய வலையமைப்பின் மூலம் மின்சாரம் பெறுவதற்கு வழிசெய்தது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...