மூத்த அரசியல் ஆய்வாளரும், நூலாசிரியரும், பன்முக ஆளுமையாளருமான  ஏ.ஜே.எம்.நிழாம் காலமானார்

Date:

மூத்த அரசியல் ஆய்வாளரும், நூலாசிரியரும், பன்முக ஆளுமையாளருமான  ஏ.ஜே.எம்.நிழாம் நாம்புலுவ பஸ்யாலையில்  காலமானார்.

கொழும்பு, புதுக்கடையை பிறப்பிடமாகக்கொண்ட அவர் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினர் என்பதுடன் 1988 ஆம் ஆண்டு இடம்பெற்ற மேல் மாகாண சபை தேர்தலில் அக்கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

1990 ஆம் ஆண்டு “முஸ்லிம் காங்கிரஸ் ஆக்கமா? அழிவா?” என்ற தன்னுடைய முதலாவது நூலை எழுதி வெளியிட்டு அதன் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் இடம் பாராட்டுதல்களையும் பெற்றுக்கொண்டார்.

இது தவிர, அவர் தேசிய பத்திரிகைகளில் நூற்றுக்கணக்கான அரசியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (15) மாலை 4.00 மணியளவில் நாம்புலுவையில் இடம்பெறும்

மேலும் “தலைசிறந்த  செயற்பாட்டாளரும், நூலாசிரியரும், பன்முக ஆளுமைமிக்கவருமான  ஏ.ஜே.எம். நிலாமின் மறைவு சமூகத்துக்கு பாரிய இழப்பாகும்” என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீரிகம தேர்தல் தொகுதி அமைப்பாளர் எம்.யூ ஆதிக் தெரிவித்துள்ளார்.

 

நன்றி Siyane News

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...