வைரஸ் தொற்றினால் ஏற்படும் தடிமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு தாம் விரும்பியவாறு நுண்ணுயிர் எதிர்ப்பு (Antibiotic) மருந்துகளை உட்கொள்வது உகந்ததல்ல என்றும் இது ஒரு பயங்கரமான விளைவைத் தரக்கூடியது என்றும் சுகாதார மேம்பாட்டு பணியகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து நுண்ணுயிர் எதிர்ப்பு (Antibiotic) பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அவற்றின் மூலமான பயன் அமையும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் முகப்புத்தகத்தில் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)