வெலிசர விபத்து தொடர்பில் சிறுவன் உட்பட தந்தை கைது!

Date:

இன்று காலை ( 04) வெலிசர பகுதியில் இடம்பெற்ற விபத்தின் மற்றுமொரு சிசிடிவி காணொளி கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மேலும் மூவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி எதிர்திசையில் பயணித்த மோட்டார் வாகானம் முச்சக்கர வண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

16 வயதுடைய சிறுவனே இவ்வாறு அதிசொகுசு வாகனத்தை செலுத்தியுள்ளது .வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் சிறுவன் மற்றும் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஹபோக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...