இன்றைய வானிலை நிலவரம்

Date:

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நாளை காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை: திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 35-40 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளும் சாதாரண முதல் மிதமான அலையுடன் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

மட்டக்களப்பு – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

கொழும்பு – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

காலி – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

யாழ்ப்பாணம் – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

கண்டி – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

நுவரெலியா – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

இரத்தினபுரி – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

திருகோணமலை – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

மன்னார் – மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...

எபோலா வைரஸ் பரவல் குறித்து இலங்கையில் அவசரத் திட்டங்களை அறிவித்தது சுகாதார அமைச்சு!

எபோலா வைரஸ் பரவல் நிலைமையை உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச...

தேர்தலை ஒத்திவைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்: புத்தளத்தில் ‘பெஃப்ரல்’ அமைப்பின் விழிப்புணர்வு கருத்தரங்கு!

தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று அண்மையில்...

இலங்கையின் உப்பு ஏற்றுமதி வருமானத்தை இரட்டிப்பாக்க புதிய திட்டம்!

இலங்கையின் உப்பு ஏற்றுமதி வருமானத்தை வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 400...