இறக்குமதி பால் மாவின் புதிய விலை

Date:

இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 400 கிராம் பால் பெக்கெட் ஒன்றின் விலை 60 ரூபாவாவலும், ஒரு கிலோ கிராம் பால் மா பெக்கெட் ஒன்றின் விலையை 150 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது 400 கிராம் பால் மா பெக்கெட் 480 ரூபாவுக்கும், 1 கிலோ கிராம் பால் மா பெக்கெட்1,195 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், இந்த விலை அதிகரிப்பிற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல் 1 கிலோ கிராம் பால் மா பெக்கெட்டின் புதிய விலை 1,345 அதிகரிக்கப்படவுள்ள நிலையில், 400 கிராம் பால் மா பெக்கெட்டின் புதிய விலை 540 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...

யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31...

10 மாதங்களில் 18 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த ஒக்டோபர் மாதம் 29 ஆம்...