இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஆன்மீகத் தலைவர் நாடு திரும்பினார்

Date:

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஆன்மீகத் தலைவர் அஷ் ஷெய்க் அப்லலுல் உலமா கலாநிதி தைக்கா அஹ்மத் நாஸிர் ஆலிம் அவர்கள் இலங்கையில் பல முக்கிசதர்களையும் சர்வமத தலைவர்களையும் சந்தித்து நாட்டில் சுபீட்ச்சமான எதிர்காலத்திற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டுவிட்டு இன்று (01) நாடு திரும்பினார்.

மேலும் இன்று பண்டாரநாயக சர்வதேச விமானநிலையத்தில் இருந்து காலை 07.30 மணியளவில் புறப்பட்டார்.

அன்னாரை வழியனுப்பி வைக்கும் முகமாக கொழும்பு நாராஹேன்பிட்ட அக்போதி விகாரையின் விகாராதிபதி கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அதி சங்கைக்குரிய கெளரவ கலாநிதி கலகம தம்மாரன்சி நாயக தேரர், பிரதமரின் முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர் அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி,
வெளிவிவகார அமைச்சின்
விஷேட விருந்தினர்களை உபசரிக்கும் அதிகாரி
திரு. மனோஜ் மனம்பெரி அவர்களும் ஆன்மீகத் தலைவரின் ஏற்பாட்டுக் குழு தலைவர் அல்ஹாஜ் முஹீதீன் காதர், ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் அல்-ஹாஜ் முய்னுத்தீன் பின் முஹம்மத் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வியின் மறைவுக்கு ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி இரங்கல்!

இந்தியாவைச் சேர்ந்த  புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலானா சையத் சல்மான்...

கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி வரலாற்றில் முக்கிய மைல்கல்: 9 மாடிக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

இலங்கையின் முதலாவது முஸ்லிம் ஆண்கள் பாடசாலையாக 1884 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் மஜீட் காலமானார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஓய்வுபெற்ற சிரேஷ்ட...

Colombo Marathon போட்டிக்கான பதிவுகள் ஆரம்பம்.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு ஏற்பாடு செய்யும் Colombo...