நத்தார் கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ சகோதர மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக இன்று (25) கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களை சந்தித்து, பௌத்தம், ஹிந்து மற்றும் இஸ்லாம் ஆகிய சர்வமதத் தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் சபரகமுவ பல்கலைக் கழக வேந்தர் பேராசிரியர் கௌரவ கும்புருகமுவே வஜிர நாயக தேரர், கௌரவ கடுகஸ்தொட உபரதன நாயக தேரர், சிவ ஸ்ரீ சுப்பிரமணியம் குருக்கள், அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி மற்றும் சர்வமத கூட்டமைப்பின் தேசிய இனைப்பாளர் அல்-ஹாஜ் முஹியிதீன் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.