சில நாட்களுக்கு மின் துண்டிப்பு தொடரும்- இலங்கை மின்சார சபை!

Date:

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாளொன்றுக்கு 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.குறித்த மின் பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை மேலும் சில நாட்களுக்கு மின் துண்டிப்பு ஏற்படும் என மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.

தினமும் மாலை 6 மணி முதல் 9.30 மணிவரை இந்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.மின் பிறப்பாக்கியில் தொடர்ச்சியாக எண்ணெய் கசிவு ஏற்படுவதாகவும் , மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் தேசிய மின் விநியோக கட்டமைப்பில் சமநிலையை பேண முடியாததால் மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இக் கோளாறை சீர் செய்வதற்கு எத்தனை நாட்கள் செல்லும் என்பதை உறுதியாக கூற முடியாது என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் செளமய குமார மானவடு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...