“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் சமுர்த்தி பயனாளிகளுக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டம்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சமுர்த்தி திணைக்களம் மூலம் செயற்படுத்தப்பட்டு வரும் சமுர்த்தி வாழ்வாதார உதவி வழங்கி வைக்கும் வேலைத் திட்டத்தின் மூன்றாவது கட்டம் நேற்று முன்தினம் (06) மீரிகமை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளுக்கு சுய தொழில் ஒன்றை செய்வதற்காக தையல் இயந்திரங்கள், இலத்திரனியல் தராசுகள் உட்பட பல உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன, மீரிகமை பிரதேச சபை தவிசாளர் சனத் நந்தசிறி உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள், மீரிகமை பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

(ரிஹ்மி ஹக்கீம்)

 

Popular

More like this
Related

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 இலட்சம் பெண்கள் கர்ப்பப்பை வாய்...

அனுராதபுரம் மற்றும் குருநாகலில் புதிய வீடமைப்புத் திட்டம் ஆரம்பம்: ஜனாதிபதி பங்கேற்பு!

‘தித்வா’ சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு பதிலாக, ‘Rebuilding Sri Lanka’...

மேலும் வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள தாழமுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல்...

வலுவடையும் தாழமுக்கம்: பல பகுதிகளில் மழை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...