பெண்களுக்கெதிரான வன்முறை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டத்தின் கண்டாவளை பிரதேசத்திற்கான நிறைவு நிகழ்வு இன்று இடம்பெற்றது

Date:

பெண்களுக்கெதிரான வன்முறை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டத்தின் கண்டாவளை பிரதேசத்திற்கான நிறைவு நிகழ்வு இன்று இடம்பெற்றது.
பெண்கள் வாழ்வுரிமை கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டம் கரைச்சி. கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம்பெற்றது.
பெண்களிற்கு எதிரான வன்முறையிலிருந்து பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வூட்டும் வகையில் முன்னெடுக்கப்பட்ட 16 நாள் வேலைத்திட்டம் இன்று கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் நிறைவு பெற்றது.
இறுதி நாளான இன்றைய தினம் பெண்கள் வாழ்வுரிமை கழகத்தின் இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம், பிரதேச செயலக பெண்கள் சிறுவர் பிரிவு உத்தியுாகத்தர், உதவி திட்ட உத்தியோகத்தர், பெண்கள் வாழ்வுரிமை சிறுகுழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கண்டாவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிககாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அனைத்து இன, மத, சமய நல்லிணக்கத்தின் அடையாளமாக சமாதான வெள்ளை புறா பறக்க விடப்பட்டதுடன், பலூன்களும் பறக்கவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி நிருபர்
சப்த சங்கரி

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...