மட்டக்களப்பில் சுகாதார துறையினர் பல கோரிக்கைகளை முன்வைத்து  ஆர்ப்பாட்டம்

Date:

கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர் உத்தியோகத்தர்கள் மற்றும் நிறைவுகான் மருத்துவ உத்தியோகத்தர்கள் துறைசார் நிபுணர்கள் ஒன்றிணைந்து பல கோரிக்கைகளை முன்வைத்து வியாழக்கிழமை (16) மட்டக்களப்பு போதனவைத்தியசாலையில் இருந்து காந்தி பூங்கா வரையில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சுகாதார தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டினையடுத்து கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர் உத்தியோகத்தர்கள் மற்றும் நிறைவுகான் மருத்துவ உத்தியோகத்தர்கள் துறைசார் நிபுணர்கள் சுகாதார தொழிற்சங்கங்களின்; தலைவர்கள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சுகயீன விடுமுறையை அறிவித்துவிட்டு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முன்னால்; ஒன்றிணைந்தனர்
இதனையடுத்து ஒன்றினைந்த சுகாதார துறையினர் காலை 10 மணிக்கு அங்கிருந்து ஆர்ப்;பாட்டத்தில் ஈடுபட்டனர் இதன்போது பெற்றுத்தா பெற்றுத்த தரப்படாமல் மறுக்கப்பட்ட எமது உரிமைகளை மீளப் பெற்றுத்தா, போராடு போராடு கோவிட் கொள்ளை றோயால் அரசியல் இலாபம் பார்த்த அரசை எதிர்த்து போராடு, மிதிக்காதே மிதிக்காதே வைத்திய துறைஊழியர்களை மதிக்காவிட்டாலும் மிதிக்காதே , 2006 ஆண்டில் முன்வைக்கப்பட்ட மகிந்த சிந்தனையை பற்றி பரிசீலி, போலி வாக்குறிதிகளை நம்பி ஏமாறாதே,
எங்கள் சேவைக்குரிய உரிமைகளை தந்துவிடு, போலி மருத்துவத்தை கொடுத்து அப்பாவி மக்களை ஏமாற்றாதே, எமது கடமைகளை செய்து மக்களை காப்பாற்ற விழித்திடு, மருத்துவ மாபியா கொள்ளைகiளை நிறுத்து, பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மாஸ் வழங்கு, பொது மக்களை நோய் நொடியில் இருந்து காப்பாற்று, 12 வருடத்தில் முதலாம் தர பதவி உயர்வு வழங்கு, விசேட கடமை கொடுப்பனவை 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கு,
நடைமுறைப்படுத்துமாறும், பறிக்கப்பட்ட பதவிநிலை உத்தியோகத்தர் தகுதியை மீண்டும் வழங்கு ,மேலதிக நேரத்திற்கான நியாயமான அலகு கொடுப்பனவை வழங்கு தாதி உத்தியோகத்தர்கள் தமது பதவி உயர்வு தொடர்பாக அமைச்சரவையில் அனுமதி வழங்கியபோதும் இதுவரை சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆரம்பித்த ஆர்ப்பாட்ட ஊர்வலம்
அங்கிருந்து கோவிந்தன் வீதிவழியாக மட்டக்களப்பு பிரதான பஸ்தரிப்பிநிலையம் சென்று அங்கிருந்து நகர் மணிக்கூட்டுக் கோபுரத்தையடைந்து அங்கிருந்து மட்டு பொலிஸ் நிலைய வீதி சுற்றுவட்டத்தையடைந்து பின்னர் அங்கிருந்து கோட்டமுளை பாலம் ஊடாக காந்தி பூங்காவரை சென்றனர் .

இதன் பின்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சுகாதார துறையினர் பிற்பகல் ஒரு மணிக்கு அங்கிருந்து கலைந்து சென்றனர்

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...