மேற்கிந்திய தீவுகளுடனான இரண்டாவது டி 20 ஆட்டத்தில் 9 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றி!

Date:

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி கராச்சியில் இன்று (14) இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் முஹம்மத் ரிஸ்வான் 38(30), கய்தர் அலி 31(34), இப்திகார் அஹ்மத் 32(19),சதாப் கான் 28(12) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்கள்.

மே.தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஸ்மித் 2(29) விக்கெட்டுகளையும், அகேல் ஹொசைன் , தோமஸ் , வொல்ஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

173 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மே.தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

மே.தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில் பிரண்டன் கிங் 67( 43) , செபர்ட் 35(19) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஷஹீன் அப்ரிடி 3(26), முஹம்மத் நவாஸ் 2(36), ஹரிஸ் ரொவ்ப் 2 மற்றும் வஸீம் ஜார் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

போட்டியின் நாயகனாக சதாப் கான் தெரிவானார்.

பாகிஸ்தான் அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.மூன்றாவதும் இறுதியுமான ஆட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை (16) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்ரஸா மாணவன் மரணம்: குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எழும் தீவிர கேள்விகள்

வெலிமடை மதரஸா மாணவன் ஸஹ்தி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக நாடு...

காத்தான்குடியில் ஈச்ச மரமும் கத்தாரில் அரச மரமும்…!

- சஜீர் முஹைதீன் இது வேற எங்கயும் இல்ல கட்டார்தான் இது. ஒரு...

பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்!

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி...

காசாவுக்கான ட்ரம்பின் திட்டத்திற்கு ஐ.நா. ஆதரவு: ஹமாஸ் நிபந்தனைகள் நிராகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்திற்கு ஐ.நா. ஒப்புதல்...