ஸம் ஸம் நிறுவனத்தின் அனுசரணையில் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மேம்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம்!

Date:

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மேம்மடுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை மத்திய மாகாண கல்வித் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

ELAP (Emergency Learning Assistance programme) எனும் இத் திட்டத்தின் முதலாவது கட்டமாக 21 நிலையங்களில் 1050 மாணவர்களுக்குபரிட்சையில் சித்தியடைய விஷேட பயிற்சி வழங்கும் இந்த திட்டத்திற்கு ஸம் ஸம் நிறுவனம் அனுசரணை வழங்குகிறது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 25 ஆம் திகதி வியாழக்கிழமை மத்திய மாகாணக் கல்வித் திணைக்களத்தில் கைச்சாத்திடப்பட்டது. இந் நிகழ்வில் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் திரு. அமரசிறி பியதாச,மேலதிக கல்விப் பணிப்பாளர்கள், ஸம் ஸம் நிறுவனத்தின் தலைவர் முப்தி.யூசுப் ஹனிபா மற்றும் ஸம் ஸம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸம் ஸம் நிறுவனமானது இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் கல்வி, சமூக நல்லிணக்கம், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய பகுதிகளில் “மதங்களைக் கடந்த மனிதநேயம்” என்ற கருப்பொருளின் கீழ் இயங்கும் பதிவு செய்யப்பட்ட இலங்கை சமூக சேவைகள் அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...