ஹெலிகொப்டர் விபத்து தொடர்பில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய பதிவை இட்டதாக கூறி இந்திய இளைஞன் ஒருவர் கைது!

Date:

இந்திய குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்துச் சம்பவம் தொடர்பில் சர்ச்சைக்குரிய பதிவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இராணுவ ஹெலிகொப்டர் விபத்துச் சம்பவம் தொடர்பாக தேவையற்ற யூகங்களையும் , கருத்துக்களையும் பரப்ப வேண்டாம் என இந்திய விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது.அவ்வாறு சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துக்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந் நிலையில் இந்திய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஷிபிந்த் என்ற 24 வயது இளைஞன் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக சைபர் கிரைம் பொலிசாரால் கைது செய்யப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...