அநுராதபுரத்தில் டெங்கு நோய் தீவிரம்!

Date:

அநுராதபுரத்தில் டெங்கு நோய் தீவிரமாக பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக மாவட்ட தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் தேஜன சோமதிலக்க தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் இறுதி வாரத்தில் மாத்திரம் பத்து டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , அநுராதபுரம் புதிய பஸ் தரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதியில் நேற்று முன்தினம் (01) மேலும் மூன்று டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.இதனையடுத்து நகரின் புதிய பஸ்தரிப்பு நிலையம் உள்ளிட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளின் போது டெங்கு நுளம்பு உருவாகக் கூடிய குடம்பிகள் அதிகமான இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மழையுடனான காலநிலை காணப்படுவதால் இந் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் , எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இந்த நிலைமை மாவட்டத்தின் ஏனைய இடங்களுக்கு பரவக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாக அநுராதபுரம் மாவட்ட தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் தேஜன சோமதிலக்க தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...