அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள பாடசாலையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளதோடு ஆசிரியர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அங்கு அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.