ஆன்மீகத் தலைவரை வழியனுப்பும் முகமாக ஏற்பாட்டுக் குழுவின் போஷகர் அல்-ஹாஜ் உஸ்மான் ஸலீம் அவர்கள் ஆன்மீகத் தலைவருக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி கெளரவித்தார்.
ஆன்மீகத் தலைவரின் இலங்கை விஜயத்தை பாராட்டி, இன ,மத ஒற்றுமையை வலியுறுத்தும் முகமாக தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம், சகவாழ்வு ஏற்படுத்தும் வகையில் இந்த குறுகிய காலத்தில் இலங்கையில் நிலைநாட்டிச் சென்றவருக்கு ஏற்பாட்டுக் குழுவின் போஷகர் அல்-ஹாஜ் உஸ்மான் ஸலீம் அவர்கள் நினைவுச் சின்னங்களை வழங்கி கெளரவித்தார்.அத்தோடு பொலிஸ் உத்தியோகத்தர்கள் , கெளரவ கலகம தம்மாரன்சி நாயக தேரர், பிரதமரின் இஸ்லாமிய மத விவகார இணைப்பாளரான கலாநிதி ஹஸன் மௌலானா மற்றும் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் முஹிதீன் காதிர் , ஒருங்கிணைப்பாளர் அல்-ஹாஜ் முயூனுதீன் பின் முஹம்மத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.