ஈராக்கில் மருத்துவமனை அருகே நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பஸரா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டிருந்த மோட்டார் வண்டியை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதோடு 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அருகில் நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ்ஸும், காரும் பலத்த சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.