உற்பத்தித்திறன் விருதுக்கான போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விசேட விருது!

Date:

2018/2019 ஆம் ஆண்டுக்கான அரச துறை திணைக்களங்களுக்கு இடையிலான தேசிய தரப்படுத்தலில் உற்பத்தித்திறன் விருதுக்கான போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் விசேட விருதினை பெற்றுள்ளது.
அதேவேளை அரச துறையில் பிரதேச செயலகங்களுக்கு இடையிலான போட்டித் தொடரில் பங்குகொண்ட 13 பிரதேச செயலகங்கள் வெற்றி பெற்றுள்ளது.
அந்த வகையில் காத்தான்குடி பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினையும், மண்முனை வடக்கு, மண்முனை தென் எருவில்பற்று, மண்முனைப்பற்று ஆகிய பிரதேச செயலகங்கள் மூன்றாம் இடத்தினையும் போரதீவுப்பற்று, ஏறாவூர்ப்பற்று, கோறளைப்பற்று மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகங்கள் சிறப்பு மெச்சுரை விருதினையும் மண்முனை தென்மேற்கு, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்கு வடக்கு மற்றும் ஏறாவூர் நகர் ஆகிய பிரதேச செயலகங்கள் மெச்சுரை விருதினையும் பெற்றுள்ளது.

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழு!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து,...

புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா நியமனம்!

மலாய், தென் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய ஆய்வுகளில் சர்வதேச ரீதியாக அறியப்படும்...

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலை குறைப்பு

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடத...

வெலிமடை மத்ரஸா மாணவன் மரணம்: நீதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

வெலிமடைப் பகுதியில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் சந்தேகத்துக்கிடமான  நிலையில் மரணமடைந்ததை...