உலகின் 23 நாடுகளில் ஒமிக்ரோன் தொற்று | உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை…

Date:

தற்போது உலகின் 23 நாடுகளில் ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பைத் தடுக்க பல்வேறு உலக நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பு பதிவான நாடுகளுடனான போக்குவரத்து தடை செய்யப்பட்டு வரும் அதேவேளையில் வெளிநாட்டு பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், ஒமிக்ரோன் பரவல் சூழல் குறித்து புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேஸ் உலகில் 23 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் அவர் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவல் உலகின் கவனத்தை திருப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...