பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.இரண்டு டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
முதல் இன்னிங்ஸில் பங்காளதேசம் லிட்டன் தாஸின் அபார சதம் மற்றும் முஷ்பிகுர் ரஹீமின் 91 ஓட்டங்களினால் 330 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது .தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஆபித் அலியின் 133 ஓட்டங்களினால் பாகிஸ்தான் 286 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
ஆனால் பங்காளதேஷ் இரண்டாவது இன்னிங்சில் ஷாகின் அப்ரிடியின் அதிரடிப் பந்தில் ஈடுகொடுக்க முடியாமல் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது .இதனையடுத்து 202 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர் ஆபிட் அலி 91 ஓட்டங்களை விளாசினார்.
மற்றொரு தொடக்க வீரர் அப்துல்லா ஷபீக் 73 ஓட்டங்களை எடுத்தார். இருவரும் ஆட்டமிழந்த பிறகு அசார் அலி (24), பாபர் ஆசம் (13) ஓட்டங்கள் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை நிலைநாட்டியது .
மேலும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டம் என்பதால் வெற்றிக்காக 12 புள்ளிகளைப் பெற்ற பாகிஸ்தான் அணி ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.