இலங்கையில் கடந்த மூன்று நாள்களில் 588 விபத்துகள் பதிவாகியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அறிவித்துள்ளது.
கடத்த வருடம் தந்தார் பண்டிகைக் காலங்களில் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கையை விட இந்த வருடம் 29 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது நத்தார் பண்டிகைக் காலத்தின் போது, இந்த வருடம் வீதி ‘விபத்துகளின் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரித்துள்ளதோடு,வீடுகளில் இடம்பெற்ற விபத்துகளின் எண்ணிக்கையும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 14 சதவீதம் அதிகரித்துவிளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது,இந்த வருடம் குறிப்பிடத்தக்களவு அதிகளவு விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை குறிப்பிட்டுள்ளது.