கரீபியன் நாடான டொமினிக்கன் குடியரசில் ஜெட் விழுந்ததில் இதுவரையில் 9 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லொஸ் அமெரிக்காவில் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க இருந்த நிலையில் ஜெட் விழுந்து நொறுங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.லா இசபெல்லா விமான நிலையத்திலிருந்து புளோரிடா சென்ற ஜெட் 15 நிமிடங்களில் அவசரமாக தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் , விபத்தில் இரண்டு ஊழியர்கள் 6 வெளிநாட்டவர்கள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.