அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தாக்கிய புயலுடன் கனமழை பெய்ததில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எதிர்வரும் நாட்களில் கலிபோர்னியா , நெவாடா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
சில்வேரடோ , மோட்ஜெஸ்கா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச் சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாகவும், நிலச் சரிவால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் அதனை சீர் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.