கிளிநொச்சி வட்டக்கச்சி புதுப்பாலம் பகுதியில் விபத்து | ஒருவர் பலி மேலும் இருவர் படுகாயம்

Date:

கிளிநொச்சியில் இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படும் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வட்டக்கச்சி புதுப்பாலம் பகுதியில் அதி வேகமாக வந்த டிப்பர் வாகனம் வாய்க்கால் ஒன்றுக்குள் தடம் புரண்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துடன் இளம்பெண் ஒருவர் உட்பட்ட இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதேவேளை குறித்த  டிப்பர் வாகனத்தினை சிலர் மோட்டார் சைக்கிள்களில் துரத்திச் சென்றதாகவும், அதன்போதே டிப்பர் வாகனச் சாரதி அதி வேகமாக வாகனத்தைச் செலுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளதாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் கிளிநொச்சி நாகேந்திரபுரம் பகுதியைச சேர்ந்த 17 வயதான டிலக்சன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வாகனத்தில் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 23 வயதுடைய இளம் பெண் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இது குறித்து கரவெட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணின் குடும்பத்தார் எனத் தெரிவிக்கும் நபர்கள் தெரிவிக்கையில்,
தம்முடைய பெண்ணை சில நபர்கள் டிப்பர் வாகனத்தில் கடத்திச் சென்றதாகவும் அவர்களை தாங்கள் விரட்டிச் சென்றதாகவும் தப்பிக்க முற்பட்ட டிப்பர் வாகனமே விபத்துக்குள்ளதானதாகவும் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...