திருகோணமலை-கிண்ணியா குறிஞ்சங்கேணி பகுதியில் மிதப்பு பாலம் கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான மிதப்பு பால உரிமையாளர் உட்பட மூவர் திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தினால் இன்று (16) பிணையில் விடுதலையாகியுள்ளனர்.
இதேவேளை , குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நளீம் கடந்த 10 ஆம் திகதி பிணையில் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.