கொழும்பின் பல பாகங்களில் (கொழும்பு 12,13,14,15 ) நாளை நள்ளிரவு முதல் 18 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அம்பத்தலை முதல் கொழும்பு வரை நீரைக் கொண்டு செல்லும் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.