நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி நிறைவு செய்யுமாறு கொவிட் தடுப்பு செயலணிக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இனிவரும் நாட்களில் பொதுமக்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது கொவிட் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பதை கட்டாயமாக்குமாறும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.