சதொச விற்பனையகங்களில் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள்!

Date:

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (12) முதல் மாதம் இறுதி வரையில் சதொச விற்பனையகங்களில் சில வகையான அரிசிகளை 100 ரூபாவுக்கு குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என வர்த்தக துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சதொச வர்த்தக நிலையங்களில் 50 அத்தியாவசிய பொருட்களை இன்று (12) முதல் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என்று நேற்று (11) ஊடக சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

நாடு அரிசி 1Kg – 99 ரூபா 50 சதத்திற்கும் , சம்பா அரிசி 1Kg – 130 ரூபாவிற்கு சதொச விற்பனையகங்களில் விற்பனை செய்யப்படுகிறது.எந்த அரிசி வகைகளையும் தலா 5 kg அளவில் பெற்றுக் கொள்ள முடியும்.சீனி 1Kg 125 ரூபாவுக்கும் , பருப்பு 1Kg 240 ரூபாவுக்கும் , நூடில்ஸ் 125 ரூபாவுக்கும் ,சவர்க்காரம் உள்ளிட்ட 50 பொருட்களை சந்தையில் நிலவும் விலையை விடவும் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...