சமையல் எரிவாயு தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் லிட்ரோ, லாப் கேஸ் நிறுவனங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று (31) அறிவித்துள்ளன.
சமையல் எரிவாயு வெடிப்புகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி சிவில் சமூக ஆர்வலர் நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தைக்கு வெளியிடப்பட்ட அபாயகரமான எரிவாயு மீளப் பெறுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபையும் எரிவாயு நிறுவனங்களும் தவறிவிட்டதாக அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.