சவூதி அரேபியாவில் நாத்திகவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்து பதிவிட்ட நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏமன் நாட்டைச் சேர்ந்த அலி அபு இரண்டு ட்விட்டர் கணக்கில் மத நம்பிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.நவீனமயமாக்கலை நோக்கிச் செல்லும் சவூதி அரேபியா மக்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளில் தலையிடுவதை நிறுத்துமாறும் , இறைவன் நிந்தனையை குற்றமற்றதாக அறிவிக்குமாறும் வலியுறுத்தி வந்தார்.டுவிட்டர் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை வைத்து காவல்துறை அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்தனர்.நாத்திகம் மற்றும் கடவுள் மறுப்பு கொள்கைகளை அலி அபு பரப்பியதாக குற்றம் சாட்டிய நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.