ஜப்பானின் புகுஷிமா மாகாணத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளி பூஜியமாக பதிவான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.20 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலஅதிர்வின் தாக்கம் சில இடங்களில் 7 புள்ளியாக பதிவானதாகவும் கூறப்படுகிறது.
நில நடுக்கம் காரணமாக புகுஷிமாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பல்லாயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.