தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிறில் ராமபோசாவுக்கு (69) கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மிதமான கொவிட் அறிகுறிகளுக்காக அவா் சிகிச்சை பெற்று வருகிறாா் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றின் உருமாறிய வகையான ஒமிக்ரோன் பாதிப்பு தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 24 ஆம் திகதி முதன் முறையாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து, ஒமிக்ரோன் பாதிப்பு உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.