இஸ்லாத்தின் பெயரில் வன்முறையில் ஈடுபடுவர்களை பாகிஸ்தான் அரசு விட்டு வைக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரியந்த குமாராவுக்கு இரங்கல் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மதத்தின் பெயரால் மக்கள் பிறரை கொல்வது வருத்தம் அளிப்பதாகவும்,” நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களுக்கு சாந்தியையும், நீதியையும் போதித்துள்ளார் என்றும் பிரியந்தவிற்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.